முஸ்லிம்களுக்கு எதிராக ஞானசார தேரரின் தலைமையில் பௌத்த பிக்குகள் கெட்டப்பே என்னுமிடத்திலிருந்து தலதா மாளிகைக்கு நடைபயணமாக சென்றிருந்தனர். அண்மையில் அதிகமாக இணையத்தில் பேசப்பட்ட மட்டக்களப்பு மங்கள ராமய விகாராதிபதி சுமனரத்ன தேரர் உட்பட பல பிக்குகள் கலந்து கொண்டனர்.
நடைபயணமாக தலதா மாளிகைக்கு வந்த பின்னர் பூஜை வழிபாடுகளை முடித்துவிட்டு பொது பல சேனா பொதுச் செயலாளர் ஞானசார தேரர் உரையாற்றுகையில், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இலங்கையை பாதுகாக்க வேண்டுமாயின் அனைத்து பௌத்தர்களும் ஒன்றிணை வேண்டும். பாட்டான் முப்பாட்டன் ரத்தம் சிந்தி போராடி தந்த உரிமைகள் மற்றும் சொத்துக்களை பாதுகாத்துக் கொள்வதில் பல இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளது. ஆட்சியில் உள்ளவர்களும் பெரும்பான்மை மக்களை அழித்துக் கொண்டே சிறுபான்மையை வளர்த்துக் கொண்டே வருகின்றனர். இந்நாட்டின் சட்டம் எங்களுக்கு மட்டும்தான். பொலிஸாருமே நமது முட்டியைதான் உடைக்கிறான். சிறுபான்மையை கண்டதும் பூனைபோல் பதுங்குகின்றான். நமது நாட்டில் சட்டம் காக்கப்படவில்லை. இலங்கையில் சட்டத்தை வெள்ளைக்காரன் எழுதிக் கொடுத்த சட்டத்தை கறுப்பு வெள்ளையன் தாலாட்டும் சட்டமாகும். இந்த சட்டத்தினால் சிங்களவனும் அழிகின்றான். இந்நாடும் அழிகின்றது.
இந்நாட்டின் தேசியவாதிகளுக்கு எதிர்காலத்தில் சிறைவாசல் திறந்து வைக்கப்படவுள்ளது. கல்லத்தொணியில் வியாபாரம் செய்ய வந்த முஸ்லிம்கள் கண்டி அரசிடம் மண்டியிட்டு தங்குவதற்கு இடம் கேட்டிருந்தனர். அரசனும் இன்னும் நான்கு தலைமுறையின் பின் பௌத்தராக மாற வேண்டும் என ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே கிழக்கில் 4000 முஸ்லிம்களை குடியமர்த்தினான். அந்த 4000 குடும்ப வாரிசுகள் பௌத்த அனுஷ்டானங்களுக்கும் கலாசாரத்துக்கும் கொஞ்சம்கூட மரியாதை தருவதில்லை. காத்தான்குடி, சம்மாந்துறை, அக்கரைப்பற்று போன்ற இடங்களுக்கு போனர் தெரியும் அங்கே எங்கள் அடையாளம் சிதைக்கப்பட்டிருக்கிறது. எங்கள் சந்திர வட்டல்கல்லின் மீது அங்குள்ள அம்மனிகள் துணி துவைக்கின்றனர். பௌத்த அனுஷ்டானங்களுக்கு புராதணங்களையும் எப்படி அவமதிக்கின்றனர். அவர்களுக்கென்று சட்டம் அமைத்துக் கொண்டு நாளுக்கு நாள் நம்மை விட்டு விலகிச் செல்கின்றனர். இந்நாட்டின் அரசியல்வாதிகள் சிங்களவருக்கு எதிரான அடக்கு முறைகளை கண்டு மௌனித்திருக்கிறார்கள். இவர்கள் விழித்துக் கொள்ள வேண்டுமென தலதா பெருமானை வேண்டுகிறேன்.
ஒரு நாட்டில் ஒரு சட்டம் அந்த சட்டத்தின் கீழ் எல்லோரும் கட்டுப்பட வேண்டும். முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் நாட்டின் எல்லா இடத்திலும் வியாபார செய்ய முடியுமாயின், குடியேர முடியுமாயின், வேண்டிய நபரை திருமணம் செய்து கொண்டு அவர்களது கலாசாரத்தை வளர்க்க முடியுமாயின், சென்ற இடமெல்லாம் பள்ளிவாசல் கட்டிக் கொண்டு சத்தம் போட்டுக் கொண்டு வாழ முடியுமாயின் ஏன் இந்நாட்டின் பூர்வீகமாகக் கொண்ட உலகின் சிறந்த பாரம்பரியத்தையும் கலாசாரத்தை கொண்ட எமக்கு காணி உரிமம் இருந்தும் கல்லத்தொணி போல் வாழ முடியாது தலதா பெருமானே. ஆட்சியாளர்கள் வெளிநாட்டவரின் கைபொம்மையாக இருந்து கொண்டு இந்நாட்டின் பௌத்த பிக்குகளுக்கு கை வைக்க ஆரம்பித்துள்ளனர். பிக்குகளை அகௌரவப்படுத்துமளவிற்கு இங்குள்ள அரசியல் வாதிகளும் முன்வந்துள்ளனர்.
அது மட்டுமல்ல இந்நாட்டில் முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பு, இனவாதம், வியாபாரம் ஆகியவற்றால் இந்நாடே முழ்கிவிட்டது. எங்களவன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான். தலதா மாளிகையின் மாநாயக்கரும் புத்தகம் படித்துக் கொண்டு பூஜை செய்து கொண்டும் இருக்காமல் தேசியத்தை பற்றியும் பேச வேண்டும் எனவும் தெரிவித்தார். இளைஞர்கள் ஆங்காங்கே அணி திரண்டு போராடுகின்றனர். நமது இளைஞர்கள் ரத்தம் சிந்தி உயிர் போகும் வரையா காத்திருக்கிறீர்கள் என்பதையே நாம் விசாரிக்க இங்கு வந்தோம் என பேசி முடித்தார் பொது பலசேனா பொதுச் செயலாளர் ஞானசார தேரர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments