கண்டி, கல்ஹின்ன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (20) இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதோடு, துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு காரணமான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அங்கும்புற பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெபிலகொல்ல முஸ்லிம் பள்ளிக்கு அருகிலுள்ள வீதியோரத்தில் நின்று கொண்டிருந்த குறித்த இரு இளைஞர்கள் மீது, காரில் வந்த இனந்தெரியாத குழுவினர் இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டு தப்பித்துள்ளனர்.
சம்பவத்தின் பின்னர், சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து சுமார் 04 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள கபல்கஸ்தென்ன எனும் இடத்தில் வைத்து, பொதுமக்களின் உதவியுடன் அக்குழுவைச் சேர்ந்த சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளதோடு, அவரிடமிருந்து ரி56 ரக துப்பாக்கி ஒன்றையும் அதற்கான 20 ரவைகளையும் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவத்தை அடுத்து, பூஜாபிட்டிய பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட, குறித்த குழுவினர் பயணித்த, சிவப்பு நிற 301 - 2218 எனும் இலக்கத்தைக் கொண்ட காரையும் கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர், கண்டி மஹியாவ பிரதேசத்தைச் சேர்ந்த மொஹமட் அலி (30) எனத் தெரிவித்துள்ள பொலிஸார், குறித்த சம்பவத்தில் காயமுற்ற மற்றம் உயிரிழந்தவர்களும் முஸ்லிம்கள் என தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட மேலும் இருவரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் இடம்பெற்ற போது, அப்பிரதேசத்தில் பதிவாகிய கண்காணிப்பு கமெராவில் பதிவாகிய காட்சி...
RSM
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments