AYM வெற்றிக்கு நான் காரணமில்லை - சிம்பு

இப்போது நாட்டில் நிலவும் பணப்பிரச்சினைகளையும் மீறி படம் நல்ல வசூலை பெற்றிருக்கிறது என்று சொல்கிறார்கள். இந்த வெற்றிக்கு காரணம் நிச்சயமாக நாங்கள் இல்லை. ரசிகர்கள்தான் காரணம். இந்த வெற்றி என்னுடையது கிடையாது. இது மக்களுடைய வெற்றி. இந்த தருணத்திலும் அனைவரும் வந்து படம் பார்ப்பது மனதை உருக்கிவிட்டது. ஏ.ஆர்.ரகுமான் சார் என்னுடைய படம் என்பதையும் தாண்டி இந்த படத்தில் அற்புதமான இசையை கொடுத்திருக்கிறார். ஒட்டுமொத்த படக்குழுவும் தங்களது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள். சதீஷுக்கு தியேட்டரில் நல்ல வரவேற்பு இருந்தது.
கிளைமாக்ஸை பார்க்கும்போதுஇ எப்படி இருக்கப்போகிறது என்று எனக்கே பயமாக இருந்தது. அதை பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். பார்க்காதவர்கள் தியேட்டரில் சென்று பார்த்தால் தெரியும். இந்த நேரத்தில் இறைவனுக்குத்தான் எல்லா நன்றிகளையும் சொல்லவேண்டும். அவர் இல்லையென்றால் நாமெல்லாம் இல்லை. சிறப்பு என்று சொல்லி முடித்தார்.
No comments