பேய் விரட்டும் பிரியசாத் கைது
கொலன்னாவை டான் பிரயசாத்த 2015 ம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலில் பொது ஜன பெரமுன என்னும் கட்சிக்காக பிரசாரங்களை மேற்கொண்டு வந்தவர். இவரின் பிரதான தொழிலாக பேய் பிடித்தவர்களை தொயில் ஆடி பேய் விரட்டுவதுதான் இவரின் வேலை. இவர் சமீப காலமாக சமூக வளைத்தளங்களில் மக்களை ஒன்று திறட்டி முஸ்லிம்களுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து வந்தவர். சமூக வளைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டும் வந்தவர். கடந்த 3ஆம் திகதியன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட முஸ்லிம் மக்களை தற்கொலை தாக்குதல் நடத்தியும்இ தீ வைத்து எரித்தும் கொலை செய்வேன் என அச்சுறுத்தல் விடுத்திருந்த டான் பிரியசாத் எதிர்வரும் நவம்பர் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்ற உத்தரவு.
இனவாதத்தை தூண்டும் வகையில் கருத்துகளை வெளியிட்டு வந்தமைக்காக பிரியசாத் கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் தலைமையிலான குழுவினர் டான் பிரசாத்துக்கு எதிராக நீதி மன்றத்தில் ஆஜராகின்றனர்.
இவர் எதிர்வரும் 19ம் திகதி தம்புள்ள நகரில் பள்ளி வாசல் அமைப்பதற்கு எதிராக சமூக வளைத்தளத்தில் மக்களை ஒன்று திறட்டி மாபெரும் போராட்டத்தை முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments