இசை மேதை பாலமுரளிகிருஷ்ணா காலமாணார்

தென்னிந்தியக் கருநாடக இசை மேதை. இவர் பாடகர் மட்டும் அல்லாமல், ஒரு பாடல் இயற்றுநர் (வாக்கேயக்காரர்) மற்றும் இசைக்கருவி வல்லுனருமாவார். 1930 ம் ஆண்டு ஜூலை 6ம் திகதி சங்கரகும்தம், ஆந்திர பிரதேசத்தில் பிறந்தவர். 71 வருட இசைத்துறை அனுபவம் கொண்டவர்.
சென்னை ஆர்.சென்னை ஆர்.கே.சாலையில் உள்ள அவரது வீட்டில் உயிர் பிரிந்தது. தேசிய விருதுகள்இ பத்ம விபூஷண், செவாலியேஇ சங்கீத கலாநிதி உட்பட பல விருதுகளை வென்றவர் இவர். திருவிளையாடல் படத்தில் வரும் 'ஒரு நாள் போதுமா' என்ற பாடல் இவரை பலரிடத்திலும் கொண்டு போய் சேர்த்தது.
கர்நாடக இசையுலகில் தனக்கென ஒரு இடம் கொண்டு சாம்ராஜ்ஜியம் நடத்தியவர் இவர். நடிகர் கமல்ஹாசன் இவரை பற்றி குறிப்பிடும்போது 'என் இசை குரு' என்பார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை பெற்றவர் இவர்.
No comments