விஜய் டிவியில் வரும் எல்லாத் தொடரும் பிரபல்யமானது. அதில் மிக முக்கியமான தொடர்க என்றால் கல்யாணம் முதல் காதல் வரை. சிறுவர் முதல் பெரியவர் வரை எல்லோரையும் கவர்ந்த தொடராகும். பொதுவாக இந்த தொடர் இளைஞர்களை கவர்ந்ததற்கு முக்கிய காரணம் இந்த தொடரின் காதநாயகி பிரியா பவானி சங்கர். இவர் 2011 ம் ஆண்டு புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பின் இவர் விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து
வழங்கியுள்ளார். இவர் அர்ஜூனுக்கு மனைவியாக நடித்து வருகிறார். இந்த தொடரில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இத் தொடர் பிரபல்யமாவதற்கும் இவரே காரணம். இவருக்காகவே பார்த்து வந்த நிலையில் பிரியாவிற்கு பதிலாக வேறு ஒருவர் நடிக்கவுள்ளதாக தெரியவந்தது. இதை உறுதிப்படுத்தும் வகையில் அவரின் பேஸ்புக் பக்கத்தில் கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் இரண்டு வருடங்கள் பிரியாவாக வாழ்ந்து வந்ததாகவும் இப்போது நான் விளக்கிப் போகிறேன் என அவரே ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
பிரியாவிற்காக தொடரை பார்த்து வந்த ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இவரை இனி பார்க்க முடியாத என கண்கலங்கியுள்ளனர். பிரியா இல்லாத கல்யாணம் முதல் காதல் வரை
நிலைக்குமா...? மேலும் இவருக்கு மிக விரைவில் திருமணமாகவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இவரது ரசிகர்களுக்கு இன்னுமொரு அதிர்ச்சி. இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு வண்ண வானிவில்லை தொடருங்கள். பிரியா இல்லாத கல்யாணம் 2 காதல் நிலைக்குமா..?
No comments